ஸ்வைப் குரல் அழைப்பு டேப்லட் அறிமுகம்


sugapriya| Last Updated: புதன், 13 ஜூலை 2016 (15:07 IST)
ஸ்வைப் நிறுவனம் அதன் புதிய என்ற டேப்லட்டை தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 


 

 


ஸ்வைப் X703 டூயல் சிம் ஆதரவு கொண்ட டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. 10.1 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே(10.1 Inch IPS Display), ARM மாலி ஜிபியூ மற்றும் 1ஜிபி ராம்(1GB RAM) உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MTK8321 ப்ராசசர்(1.3 GHz Quadcore Mediatech MTK8321 Processor) மூலம் இயக்கப்படுகிறது.

இதை தவிர மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஸ்வைப் X703 டேப்லட்டில் எல்இடி ஃபிளாஷ்(LED Flash) கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா(5 Megapixel rear camera) மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா(2 Megapixel front camera) உள்ளது. இந்த கைப்பேசியில் 6000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், USB OTG, FM ரேடியோ, 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 260.6x160.7x9.6mm நடவடிக்கைகள் மற்றும் 500 கிராம் எடையுடையது. இதில் நியூஸ்ஹன்ட் மற்றும் கிளீன் மாஸ்டர் போன்ற அப்ளிக்கேஷன்கள் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ளது.

ரூ.7,499 விலையுடைய இந்த ஸ்வைப் X703 டேப்லட் ஸ்நாப்டீல் இணையதளம் வழியாக வெள்ளை வண்ணத்தில் தற்போது பிரத்யேகமாக கிடைக்கிறது. இந்த டேப்லட் 6 மாதங்கள் வாரண்டியுடன் இந்தி மொழியையும் ஆதரிக்கிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :