1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : சனி, 16 ஜூலை 2016 (11:59 IST)

குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஸ்மார்ட் வாட்ச்

குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் கண்காணிக்க விடெக் கிட்ஸீம் என்ற ஸ்மார்ட் வாட்ச் நிறுவனம் பிரத்யோகமான குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்சை தயாரித்துள்ளது.




குழந்தைகள் இன்றைய நாளில் பெற்றோரை விட்டு தனித்து தூரமாக இயங்க வேண்டி உள்ளது. அந்த சமயங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இந்த பிரச்சினைகளிலிருந்து மீள குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பயணங்களை கண்காணிக்க ஏற்ற குழந்தைகள் ஸ்மார்ட் வாட்ச்கள் வந்துள்ளன.

குழந்தைகளின் பாதுகாப்பு வசதிக்கும், பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த ஸ்மார்ட் வாட்சில் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. குழந்தைகள் எங்கு செல்கிறது என்பதை நமது செல்போனில் இருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் அதில் குறிப்பிட்ட 5 முதல் 10 வரையிலான போன் நம்பர் சேமிப்புக்கு வசதியும் உள்ளது. இதனால் மூலம் சுலபமாக குழந்தைகள் எந்த பிரச்சினையாயினும் தொடர்பு கொண்டு பேச இயலும்.

அலாரம், காலண்டர் ஆலார்ட்ஸ், விளையாட்டு வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ளது. குழந்தைகளுக்கு ஏதும் ஆபத்து என்றால் ஓர் பட்டனை அழுத்தினாலே அதில் சேமிக்கப்பட்ட பெற்றோர் தொலைபேசிக்கு உடனே அழைப்பு ஒலி போய் விடும். மேலும் இதில் உள்ள GPS கருவி மூலம் குழந்தை எந்த இடத்தில் உள்ளது என்பதையும் கண்காணிக்க முடியும்.

ஸ்மார்ட் வாட்ச்-யில் உள்ள வழித்தட பதிவேட்டில் பதிவு செய்து விட்டால் குழந்தை ஏதோ நினைப்பில் பாதை தவறினாலும் உடனே பீப் ஒலி செய்து அவர்களுக்கு சரியான வழியை கூறும். இதன் மூலம் குழந்தைகளும் தனியாக வகுப்புகளுக்கு சென்றுவர முடியும். பெற்றோர் குழந்தையை பற்றி அதிகம் பயப்பட வேண்டியதில்லை.

இதில் குழந்தைகள் விரும்பும் வகையில் நீலம், ஊதா, பிங்க், பச்சை, வெள்ளை போன்ற வண்ணங்களில் ஸ்மார்ட் வாட்ச்கள் கிடைக்கின்றது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளது. பேசுவதை ரெக்கார்ட் செய்வது, வகுப்புகளுக்கான நேரத்தை கூறுவது, பல விதமான கடிகார முன் திரைகள் கொண்டும் உள்ளன.