மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் ரோபோ


Abimukatheesh| Last Modified புதன், 1 ஜூன் 2016 (21:04 IST)
மனிதர்களின் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் சர்வதேச ரோபாடிக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மனிதர்களின் சேவைக்காக ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

பெப்பர் என்ற பெயர் கொண்ட இந்த ரோபோ மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்த இந்த ரோபோ ஆட்டம் ஆடி பலரையும் மகிழ்வித்தது.
 
மேலும் இந்த பெப்பர் ரோபோவை ரயில் நிலையங்களில் வழிகாட்டவும், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையிலும் பயன்படுத்தல்லம் என்று வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :