ரிலையன்ஸ் ஜியோ மாதக்கட்டணம் ரூ.499??


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 27 நவம்பர் 2016 (15:33 IST)
ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ சிம் கார்டை பலரும் தற்போது உபயோகித்து வருகின்றனர். அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச அழைப்பு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் 3 மாதத்திற்கு மட்டும் தான்.

 
 
ஜியோ நெட்வொர்க்கில் பிரச்னை இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த சலுகை மேலும் 3 மாதத்திற்கு,  நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் சலுகை காலம் முடிந்த பிறகு மாதம் 499 ரூபாயை கட்டணமாக ஜியோ நிர்ணயிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
லைஃப் (LYF) ஸ்மார்ட்போன்: 
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைஃப் (LYF) மொபைல் ஃபோனை பயன்படுத்தினால் கட்டணம் மாறுபடுகிறது. லைஃப் மொபைல் உபயோகிப்பவர்களுக்கு, இந்தியா முழுவதும் அன்லிமிடெட் அவுட் கோயிங் கால், இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணம் இல்லை, மேலும் ஒரு நாளைக்கு 4 ஜிபி வரை டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம். 


இதில் மேலும் படிக்கவும் :