போனா வராது.. ரியல்மியின் ஒருநாள் அதிரடி விற்பனை!

Prasanth Karthick| Last Modified வியாழன், 26 நவம்பர் 2020 (13:48 IST)
இந்தியாவில் பிரபலமான செல்போன் நிறுவனமான ரியல்மி நிறுவனம் ப்ளாக் ஃப்ரைடே விற்பனையை அறிவித்துள்ளது.

அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸிற்கு முன்னதாக வரும் ப்ளாக் ஃப்ரைடே என்னும் கறுப்பு வெள்ளி நாள் மிகவும் பிரபலம். இந்த நாளில் மக்கள் பலர் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பரிசுகள் வாங்கி தருவார்கள் என்பதால் அந்நாளில் அமெரிக்க நிறுவனங்கள் பல சலுகைகள் வழங்குவது வழக்கம். தற்போது இந்த ப்ளாக் ஃப்ரைடே விற்பனை இந்தியாவிலும் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ப்ளாக் ஃப்ரைடே நாளுக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி நாளை இரவு 12 மணிக்கு தொடங்கி ஒருநாள் மட்டும் ரியல்மி தயாரிப்புகள் அதிரடி விலை குறைப்பு செய்யப்பட உள்ளன. Realme X50, Buds Air Pro மற்றும் பல மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Realme X3, SuperZoom ஆகிய மாடல்களுக்கு ரூ,4,000 வரையிலும் தள்ளுபடியும், Realmi C3. 6i, Narzo 20 Pro ஆகிய மாடல்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் ஏர் பட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ.700 வரையிலும், ரியல்மி ஸ்மார்ட்கேம் 360 ரூ.500 தள்ளுபடியிலும் கிடைக்கும்.

இதுதவிர ரியல்மியின் மற்ற தயாரிப்புகளான வயர்லெஸ் இயர்போன், வயர்ட் இயர்போன், பவர்பேங்க் உள்ளிட்டவற்றிற்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை ரியல்மி அதிகாரப்பூர்வ தளம், பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவற்றில் வாங்க முடியும்.இதில் மேலும் படிக்கவும் :