1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Oura Ring 5 Launched in India with AI Health Tools and 9-Day Battery Life

இனி ஸ்மார்ட் வாட்ச் தேவையில்ல்லை.. ஒரே ஒரு ஏஐ மோதிரம் மோதும்.. இந்தியாவில் அறிமுகம்..

அவூரா ரிங் 5
அதிநவீன ஏஐ ஆரோக்கிய அம்சங்கள் மற்றும் 9 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளுடன் "அவூரா ரிங் 5"  என்ற மோதிரம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
முந்தைய மாடல்களை விட 40 சதவீதம் சிறிய அளவிலும், இலகுரக டைட்டானியம் உடலமைப்பிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் குரோமா கடைகளில் இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.  ஆகும்; கோல்ட், ஸ்டீல்த் உள்ளிட்ட பிற நிறங்களின் விலை ரூ. 50,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட் ரிங்கில் மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மூலம் இதய ஆரோக்கியம், ரத்த அழுத்த சமிக்ஞைகள் மற்றும் தூக்கத்தின் போதான சுவாசக் கோளாறுகள் துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன. 
 
ஹெல்த் ரேடார் மற்றும் லைவ் ஆக்டிவிட்டி டிராக்கிங் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உடற்பயிற்சிகளை நேரலையாகக் கண்காணிக்க உதவுகின்றன. மேலும், கவுன்சில் ஹெல்த் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்பட்டுள்ள 
 
'அட்வைசர் ஏஐ' தனிநபர் ஆரோக்கியப் பரிந்துரைகளை வழங்குகிறது. 100 மீட்டர் வரை நீரினடியில் தாங்கும் திறன் மற்றும் ரிங்கைத் தொலைத்தால் கண்டறியும் அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நார்வே ஒரு குப்பை நாடு.. நோபல் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் டிரம்ப் கடும் விமர்சனம்..