நோக்கியா போன்கள் குண்டு துளைக்காத கவசமா?


Abimukatheesh| Last Updated: திங்கள், 10 அக்டோபர் 2016 (11:55 IST)
ஆப்கானிஸ்தானில் நோக்கியா போன் துப்பாக்கி குண்டை தடுத்து ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. தற்போது அந்த நோக்கியா மொபைல் போனில் புல்லட் உட்பொதிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

 

 
மைக்ரோசாப்டடின் பொது மேலாளர் பீட்டர் ஸ்கில்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில்  நோக்கியா மொபல் போனில் துப்பாக்கி குண்டு உட்பொதிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
அதுகுறித்து அவர் பதிவில் கூறியதாவது:-
 
ஆப்கானிஸ்தானில் நோக்கியா போன் ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. நோக்கியா மொபைல் போன் துப்பாக்கி குண்டை தடுத்து, அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்கள் தனி சிறப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் கடினமான வடிமைப்பே, குண்டு துளைக்காத கவசமா செயல்படுவதற்கு காரணம். மேலும் யாருடைய உயிர் காப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லாத காரணத்தால் இணையதளத்தில் ஒரு சிலர் இதை கேலி செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :