நோக்கியா பதிப்புகள் ஆண்டிராய்ட் ஒ இயங்குதளத்துடன்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 2 ஜூன் 2017 (15:51 IST)
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது.

 
 
அதன்படி நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
புதிய ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு கூகுளுக்கு வழங்கியதும் நோக்கியா போன்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
 
ஆண்ட்ராய்டு ஒ பதிப்பில் பேக்கிரவுண்டு லிமிட்ஸ், நோட்டிபிகேஷன் சேனல்கள், பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ, ஆடாப்டிவ் ஐகான் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


இதில் மேலும் படிக்கவும் :