வாட்ஸ்அப் குரூப்பில் 256 உறுப்பினர்கள் : புதிய வசதி அறிமுகம்


Murugan| Last Modified வியாழன், 4 பிப்ரவரி 2016 (21:18 IST)
வாட்ஸ்-அப் குரூப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது வாட்ஸ்-அப் நிறுவனம்.

 

 
உலகமெங்கும் வாட்ஸ்-அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் அந்த எண்ணிக்கை 100 கோடியை தொட்டது. 
 
பெரும்பாலும், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே வாட்ஸ்-அப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுவும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏராளமன  குரூப்களை உருவாக்கி அதில் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 
 
முக்கியமாக, இந்தியாவில்தான் அதிமான குழுக்கள் வாட்ஸ் அப்பில் செயல் படுவதாகவும், ஏராளமான புகைப்படங்கள் ஷேர் செய்யப்படுவதாகவும் வாட்ஸ்-அப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜான் கவோம் கூறியுள்ளார்.
 
ஆரம்பத்தில், ஒரு குரூப்பில் அதிக பட்சம் 50 பேர்தான் இருக்க முடியும். 2014 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு போனில் மட்டுமே கிடைக்கும் தற்போது வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :