தனியார் நிறுவன விளம்பரத்தில் மோடி: வெடிக்கும் சர்ச்சைகள்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 3 டிசம்பர் 2016 (10:19 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 
 
4ஜி சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதையொட்டி பல்வேறு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்தது. அதில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றது.
 
இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் விளம்பரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என, இது சர்ச்சைக்குள்ளானது.
 
இது குறித்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜியோ நிறுவனத்திற்கு அத்தகைய சிறப்பு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை. பிரதமரின் புகைப்படத்தை அந்நிறுவனம் பயன்படுத்தும் என மத்திய அரசுக்கு தெரியாது. ஜியோ நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதன்படி, ஜியோ நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :