அம்பானியின் மாஸ்டர் ப்ளான்: ஜியோ பயனர்களே உஷார்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (10:30 IST)
முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டைகளை விற்பதை நோக்கமாக கொண்டுள்ளது என நினைப்பது தவறு. இதை முன்வைத்து அம்பானி மேலும் சில திட்டங்களை தீட்டியுள்ளார். 

 
 
இந்தியாவில் நிகழ்த்தப்படப்போகும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடையை முகேஷ் அம்பானி முன்பே அறிவார். அதனால், தன்னிடம் இருந்த கருப்பு பணத்தை ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயரில் காலி செய்து விட்டார் என்று வாட்ஸ் ஆப்பில் 'செய்தி வலம் வந்தது. 
 
ஆனால், அச்செய்தி தவரானது. இந்நிலையில் ஜியோவை முன்வைத்து மேலும் சில திட்டங்கள் வைத்துள்ளார் அம்பானி. அவை..
 
# இந்தியாவின் கிராமப்புற பகுதிகளையும் முழுமையாக சென்றடையும் வண்ணம் 4ஜி ஆதரவு வழங்கும் சூப்பர் மலிவான ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளார்.
 
# முழுமையான சுற்றுச்சூழல் மென்பொருள் மற்றும் வன்பொருள் துவங்க திட்டமிட்டுள்ளார்.
 
# மலிவு பிராட்பேண்ட் சேவையை தொடங்கி, நாடு முழுவதையும் பைபர் வயர் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளார்.
 
# இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தயாரிப்புகளை அறிமுகம் செய்து அதன் மூலமாக அனைத்து வகையான உபகரணங்களுடனும் கம்யூனிகேட் நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.
 
# ஆப்ஸ் பொழுதுபோக்கில் இருந்து சுகாதார சேவைகள் வரையிலாக ஒரு 360 டிகிரி கோணங்களிலும் பயனளிக்கும் ஆப்ஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :