ஜியோ பிரைம் ரீசார்ஜ் வேண்டாமெனில் என்னவாகும் தெரியுமா??


Sugapriya Prakash| Last Modified திங்கள், 27 மார்ச் 2017 (10:44 IST)
ஜியோ வழங்கி வரும் இலவச சேவைகள் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால் ஜியோ பிரைம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 

 
 
ஜியோ பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது ஒரு வருடத்திற்கு புத்தாண்டு சலுகைகள் நீட்டிக்கப்படும். மாதம் ரூ.303 செலுத்தி அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் ஒவ்வொரு ரீசார்ஜ் செய்யும் போதும் கூடுதல் சலுகைகளை பெற முடியும்.
 
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மார்ச் 31-க்குள் ரூ.99 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் என்னவாகும் என தெரிந்துகொள்ளுங்கள்.
 
# ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ. 99 செலுத்தி ரீசார்ஜ் செய்த பின் மாதம் ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். 
 
# சுமார் 90 நாட்கள் வரை எவ்வித ரீசார்ஜ் செய்யாமல் இருந்தாலும் ஜியோ எண் துண்டிக்கப்பட்டு விடும்.  
 
# மார்ச் 31 ஆம் தேதிக்கு பின் ஜியோ பிரைம் திட்டமே வேண்டாம் என்று ரீசார்ஜ் செய்யாமல் இருந்தாலும் டிராய் விதிமுறைகளின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஜியோ எண் தானாகவே துண்டிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :