1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sugapriya
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (13:47 IST)

ஆச்சரியமான தொழில்நுட்ப வசதிகளுடன் ஜாகுவார் லேண்ட்ரோவரின் தானியங்கி கார்

பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் நிறுவனம் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவரின் தானியங்கி காரை தயாரித்துள்ளது.



 

காரில் ஏறி அமர்ந்தால் போதும், அதுவே தானாக இயங்கி நம்மை சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு போய் சேர்த்து விடும் கேட்கவே நன்றாக இருக்கிறது.

அதெல்லாம் நடக்கற கதையா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். இந்த நியாயமான சந்தேகத்திற்கு விடையளித்து உள்ளது பிரிட்டனைச் சேர்ந்த பிரம்மாண்ட கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவர்.

தொழில்நுட்பத்தோடு, பாதுகாப்பிற்கும் குறையில்லாமல் ஜாகுவார் லேண்ட்ரோவரின் தானியங்கி காரை தயாரித்துள்ளது. சமதளப் பரப்பான சாலைகளில் மட்டுமல்ல, கரடு முரடனா காட்டு வழிப் பாதை, மலைச் சரிவுகளில் கூட தானியங்கி காரை அளித்திருக்கிறது.

360 டிகிரி கோணத்திலும் சாலையைக் கண்காணித்து வாகனத்தை இயக்கும் வகையிலான தொழில்நுட்பம், கேமராக்கள், அல்ட்ரா சோனிக் தொழில்நுட்பம், ரேடார், லைடார் சென்சார்கள் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக காருக்கு முன்னால் சிறு கல் இருந்தால் கூட தெரிந்துவிடும்.

ஜாகுவார் லேண்ட்ரோவரின் தானியங்கி கார் உங்களைப் பத்திரமாக கூட்டிச் செல்லும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறது ஜாகுவார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்