ஐபோன் 5எஸ் செல்போன் அதிரடி விலை குறைப்பு


Ashok| Last Updated: புதன், 16 டிசம்பர் 2015 (14:59 IST)
உலக அளவில் இந்தியாவில் தான் ஆப்பிள் ஐபோன் 5எஸ் செல்பேசிகளின் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக தொழில்நுட்ப இணையதளங்கள் தெரிவிக்கிறது. தற்போது ஐபோன் 5எஸ் பாதி அளவுக்கு விலை குறைக்கப்பட்டு இணைய தள சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.

 

 
16 ஜிபி மாடல் 35ஆயிரம் ரூபாய்க்கும், 32ஜிபி மாடல் 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்ட ஐபோன் 5 எஸ் மொபைல் போன் தற்போது பாதி விலைக்கு, அதாவது 22,500 ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் செல்பேசிகளின் வருகையையடுத்து,  அதிரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
பிரபல இணையதள நிறுவனங்களான பிளிப்கார்ட்டில் ரூ. 21,948க்கும், அமேசான், ஸ்நாப்டீலில் ரூ.21499க்கும் சலுகை விலையில் தற்போது விற்கப்படுகின்றன. இந்த விலை குறைப்பு, உலக அளவில் இந்தியாவில் தான் குறைந்த விலையில் ஐபோன் 5எஸ் விற்கப்படுவதாக பிரபல தொழில்நுட்ப இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
 
முதன்முதலாக 2013ல் இந்தியாவுக்கு விற்பனைக்கு வந்த போது, ஆப்பிள் ஐபோன் 5எஸ் 16ஜிபியின் விலை ரூ.53,500 என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :