தொடர்புடைய செய்திகள்
- Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போன்: டைட்டானியம் Frame.. 200MP கேமரா.. Snapdragon 8 Gen 4 சிப்செட்..!
- வெளியாகிவிட்டது மோட்டோரோலா Edge 70 Pro ஸ்மார்ட்போன்.. 6500mAh பேட்டரி.. 144Hz AMOLED திரை.. இன்னும் பல..
- Vivo X Fold 6 6 அறிமுகம்: மிரட்டலான கேமரா மற்றும் மெகா பேட்டரி.. ஆனால் விலை தான் லட்சக்கணக்கில்...
- Samsung Galaxy M47 5G.. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிப்பு...!
- நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.
ரூ.12,499 விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன்.. இவ்வளவு வசதிகளா?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பட்ஜெட் விலையிலான போன்களால் நிறைந்துள்ளது. இந்நிலையில், ரூ.12,499 விலையில் அறிமுகமாகியுள்ள 'இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20' போன் குறித்த முழுவிவரங்களை தற்போது பார்ப்போம்.
இந்த போனின் 'சன்லைக் ஆரஞ்சு' நிறம் பிரீமியம் ஆப்பிள் போனை நினைவூட்டும் வகையில் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கிறது. மேலும் ஷேடோ பிளாக், போலரிஸ் டைட்டானியம் போன்ற நிறங்களிலும் இது கிடைக்கிறது. வெறும் 7.7 மிமீ தடிமனும், 189 கிராம் எடையும் கொண்டிருப்பதால், கையாளுவதற்கு மிகவும் லேசாக உள்ளது. இதன் கேமரா பகுதியும் பிரீமியம் தோற்றத்தைத் தருகிறது. தூசி மற்றும் தண்ணீரின் சிறு துளிகளில் இருந்து பாதுகாக்க IP64 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் HD+ IPS LCD திரை உள்ளது. பஞ்ச்-ஹோல் கேமரா வடிவமைப்பு போனுக்கு நவீன தோற்றத்தை அளிக்கிறது. இதன் தொடுதிரை இயக்கம் நன்றாக இருந்தாலும், பிரகாசம் சற்று குறைவாகவே உள்ளது. குறிப்பாக, கடுமையான சூரிய வெளிச்சத்தில் அவுட்டோரில் பயன்படுத்தும்போது இதன் திரை தெளிவாகத் தெரிவதில்லை. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது நிறங்கள் மங்குவது ஒரு குறையாகத் தெரிகிறது.
சுருக்கமாகச் சொன்னால், குறைந்த பட்ஜெட்டில் நல்ல தோற்றம், மென்மையான செயல்பாடு மற்றும் சிறிய AI அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஒரு நல்ல தேர்வாகும்.
Edited by Siva
