ஃபேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை தடுக்கும் வழி

Caston| Last Updated: வெள்ளி, 2 அக்டோபர் 2015 (14:51 IST)
ஃபேஸ்புக்கில் தானாக பிளே ஆகும் வீடியோ பலருக்கு எரிச்சலை தரலாம், இதனை தடுக்கும் வழி ஃபேஸ்புக்கிலே உள்ளது.

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வீடியோக்களை ப்ளே செய்யாமலே தானாகவே பிளே ஆகும் முறையை அறிமுகம் செய்தது.

இதனால் பலரும் வீடியேக்கள் பிளே செய்யாமலே பிளே ஆவதால் அதிருப்தி அடைந்தனர். இதனால் உங்கள் data தேவையில்லாமல் விரையமாகும். இதனை தடுக்க உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வழி உள்ளது.


* உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் Settings பகுதிக்கு செல்லவும்.

* இப்பொழுது அதன் இடது பக்கம் கடைசியில் இருக்கும் Videos ஐ க்ளிக் செய்யவும்.

* அதில் இரண்டாவதாக இருக்கும் videos ஐ க்ளிக் செய்து Off செய்யவும்.

* இனிமேல் உங்கள் ஃபேஸ்புக்கில் வீடியோ தானாக பிளே ஆகாது.

இதில் மேலும் படிக்கவும் :