வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2015 (19:40 IST)

வீடு தேடி டெலிவரி செய்யும் அமேசானின் குட்டி விமானம்

பொருட்களை டெலிவரி செய்வதற்கு வசதியாக குட்டி விமானங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உள்ள அமேசான் நிறுவனம், தற்போது மேம் படுத்தப்பட்ட தங்களுக்கென பிரத்தியேக ரோபோ டெலிவரி குட்டி விமானத்தை தயாரித்து உள்ளது.


 


உலகின் முன்னணி வலைத்தள வர்த்தக நிறுவனம் அமேசான். இணையதளம் வழியாக நாம் 'ஆர்டர்' கொடுக்கும் பொருட்களை, ஆட்களின் மூலமாக வீடு தேடிவந்து டெலிவரி செய்கிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற பொருட்களை டெலிவரி செய்வதற்கு வசதியாக குட்டி விமானங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உள்ள அமேசான் நிறுவனம், தற்போது மேம் படுத்தப்பட்ட தங்களுக்கென பிரத்தியேக குட்டி விமானத்தை தயாரித்து உள்ளது. 
 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட அமேசான், சென்ற வருடமே ஒரு சிறிய விமானத்தை வடிவமைத்தது. தற்போது, மேம் படுத்தப்பட்ட ரோபோ டெலிவரி வாகனம் தயாராகி உள்ளது.

ஹெலிகாப்டர் போன்று தோன்றாமல் மாறுபட்டு காணப்படும் இந்த கருவியை 'பறக்கும் டிராலி' என்று சொல்லலாம். 15 மைல் தொலைவுக்குள் பார்சல்களை கொண்டு செல்ல இந்த குட்டி விமானம் பயன்படுத்தப்படும். அதிகபட்சம் 55 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய இது, சில நிமிடங்களிலேயே இலக்கை அடைந்து டெலிவரி செய்யும்.