அதிநவீன வசதிகளுடன் Google Nexus 5x நாளை வெளியாகிறது

Ashok| Last Updated: திங்கள், 28 செப்டம்பர் 2015 (16:32 IST)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள கூகுள் நெக்சஸ் 5x ஸ்மார்ட்போன்,
ஆப்பிள் ஐ போனிற்கு இணையாக வெளியாக உள்ளது. மொபைல் பிரியார்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக கூகுள் நெக்சஸ் 5x ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நாளை கூகுள் நிறுவனம் வெளியிடுகிறது. இதுகுறித்து அறிவிப்பை கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலும், வலைதளத்திலும் வெளியிட்ட கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 
 கூகிள் நெக்சஸ் 5x ஸ்மார்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:

இரண்டு மெமரி ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு wife வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள கூகுள் நெக்சஸ் 5x ஸ்மார்ட் போனில் 5.2 அங்குல திரை அகலம் (full HD IPS display), Quad-core 1.44 GHz Cortex-A53 & dual-core 1.82 GHz Cortex-A57 Qualcomm Snapdragon 808 Processor, 2ஜிபி ரேம், சிறப்பான வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கப் பயன்படும் 12 மெகா பிக்சல் கேமரா, வீடியோ சாட்டிங் மற்றும் முகம் பார்த்துப் பேசப் பயன்படும் வீடியோ அழைப்பை மேற்கொள்ளவும் 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 24 மணி நேரம் தொடர்ந்து பேசுமளவிற்கு மின்சக்தியை வழங்கும் திறன், மற்றும் 500 மணி நேரம் மின்சக்தியை தேக்கி வைக்கும் திறன் கொண்ட 2700mAh பேட்டரியை கொண்டுள்ளது. 
 
கூகுள் நெக்சஸ் 5x விலை: 

கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு வேறுப்பட்ட நிறங்களில் இந்த நெக்சஸ் 5x ஸ்மார்ட் போன் 16GB, 32GB என இரண்டு விதமாக மெமரி ஸ்டோரேஜ்களிலும் கிடைக்கிறது. 
 
1. 16 ஜிபி மெமரி கொண்ட கூகுள் ஸ்மார்ட்போனின் விலை  ரூபாய் 26,500 (approximately)
 
2. 32 ஜிபி மெமரி அளவுகொண்ட கூகுள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனின் விலை  ரூபாய் 32,999 (approximately)
 
இவ்விரு போன்களும் ஆண்ட்ராய்டின் புதிய இயங்குதளமான Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் இயங்குகின்றன. 
 
அக்டோபர் மாதம் இறுதியில் இந்தியவில் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

important Specifications:

 
1.   5.2-inch Full HD IPS display with 1920x1080 pixels resolution

2.   Android  Android 6.0 Marshmallow OS

3.   Corning Gorilla Glass 4

4.   Qualcomm Snapdragon 808 processor

5.   Quad-core 1.44 GHz Cortex-A53 & dual-core 1.82 GHz Cortex-A57

6.   12MP rear facing with Optical Image Stabilization

7.   5MP front facing

8.   16GB and 32GB internal storage capacity

9.   2700mAh battery

10. Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, DLNA, hotspot

11. Bluetooth v4.1, A2DP
 


இதில் மேலும் படிக்கவும் :