1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Garmin Launches Fenix 9 and Fenix 9 Pro Smartwatches With Extended Battery Life and Satellite Connectivity

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. சுமார் 300 நாள் பேட்டரி நிற்கும்.. Garmin நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்...

Garmin
Garmin நிறுவனம் தனது புதிய Fenix 9 மற்றும் Fenix 9 Pro ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிப்புற சாகசங்கள் மற்றும் உடற்பயிற்சியை விரும்புபவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல்களில் நீண்ட பேட்டரி ஆயுள், அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் பிரீமியம் வடிவமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
 
Fenix 9 மற்றும் Fenix 9 Pro ஆகிய இரண்டும் 43mm, 47mm மற்றும் 51mm அளவுகளில் கிடைக்கின்றன. AMOLED டிஸ்ப்ளே அனைத்து அளவுகளிலும் வழங்கப்பட்டுள்ளது. பெரிய மாடல்களில் குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் MiP டிஸ்ப்ளே மற்றும் சோலார் சார்ஜிங் வசதியையும் தேர்வு செய்யலாம்.
 
Fenix 9 மாடல் அதிகபட்சமாக 29 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் நிலையில், Fenix 9 Pro AMOLED மாடல் 31 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. சோலார் வசதியுள்ள Pro மாடல் வழக்கமான பயன்பாட்டில் 57 நாட்கள் வரையும், Battery Saver முறையில் 291 நாட்கள் வரையும் செயல்படும் என Garmin தெரிவித்துள்ளது.
 
Fenix 9 Pro மாடலில் முழுமையான டைட்டானியம் கேஸ் மற்றும் மெல்லிய வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. இரு மாடல்களிலும் GPS, உடல்நல கண்காணிப்பு, Garmin Pay மற்றும் பல்வேறு விளையாட்டு முறைகள் உள்ளன. மேலும் மேம்படுத்தப்பட்ட LED Flashlight மற்றும் இதயத்துடிப்பு, ரத்த ஆக்சிஜன், தோல் வெப்பநிலை கண்காணிப்பு வசதிகளும் உள்ளன.
 
முக்கியமாக, inReach செயற்கைக்கோள் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் மெசேஜ் மற்றும் இருப்பிட தகவல்களை அனுப்ப முடியும். Fenix 9 விலை $999.99 முதல், Fenix 9 Pro விலை $1,099 முதல் தொடங்குகிறது. இவை ஆகஸ்ட் 28 முதல் ஆர்டர் செய்யலாம் என Garmin தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முடியாது: கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார்