1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sugapriya
Last Updated : புதன், 13 ஜூலை 2016 (13:07 IST)

ஃபாக்ஸ்கானில் நோக்கியாவின் முன்னாள் பணியாளர்களுக்கு பணி

சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் பணிபுரிந்த கிட்டதட்ட 3,000 பணியாளர்களுக்கும் வேலை அளித்துள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது.
 


வரி ஏய்ப்பு காரணமாக சென்னை நோக்கிய தொழிற்சாலை மூடப்பட்டதை அடுத்து, நோக்கியாவின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தனது ஆலையைச் சென்னையில் மூடியது. தற்போது ஆந்திரப் பிரதேசம், தடா, ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொடங்கியுள்ள தனது ஆலைக்கு சியாவோமி ஸ்மார்ட்ஃபோன் அசெம்ப்லிங் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் உயரதிகாரி கூறுகையில், இந்த நிறுவனம் சென்ற ஆண்டு சென்னையில் இரண்டு ஆலையை மூடியதை அடுத்து, அங்கு பணிபுரிந்த பெரும்பாலான பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், நோக்கியாவில் இருந்து விருப்ப விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்ட பெரும்பாலான பணியாளர்களுக்கும் வேலை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிந்த 20 முதல் 35 வயதுக்குட்பட்ட பெரும்பாலான பணியார்களைப் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.