வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 6 ஜூன் 2016 (16:33 IST)

பேஸ்புக் நிறுவனரின் சமுக வலைத்தளங்களை முடக்கிய கில்லாடிகள்

பேஸ்புக் நிறுவனர் ஜுக்கன்பெர்க்கின் அனைத்து சமுக வலைதளங்களும் ஹேக் செய்யப்பட்டன.


 

 
பேஸ்புக் நிறுவனர் ஜுக்க்ன்பெர்க்கின் அனைத்து சமுக வலைதளங்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளாது. இந்நிலையில் ஔர்மைன் என்னும் ஹேக்கிங் குழு ஜுக்க்ன்பெர்க்கின் வலைதளங்களை ஹேக் செய்ததோடு, அவரை அக்குழு தொடர்பு கொள்ளவும் கேட்டுள்ளது.
 
ஜுக்க்ன்பெர்க்கின் வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் அனைத்து தளத்திற்கும் ஒரே கடவுச் சொல்லை உபயோகித்தது தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன் 120 மில்லியன் பேரின் லின்கெண்ட் மற்றும் பேஸ்புக்கின் பயன்பாட்டு பெயரும், கடவுச்சொல்லும் ஹேக் செய்யப்பட்டது. அதன் பிறகு இன்றும் கடவுச்சொல்லை மாற்றாமல் உபயோக்கிக்கும் பயனாளர்களின் கணக்குகளும் ஹெக் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
தற்போது ஜுக்கன்பெர்க்கின் இரண்டு வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டதில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.