தினமும் 3 ஜிபி: பிஎஸ்என்எல் வாரி வழங்கும் அதிரடி சலுகைகள்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 22 ஏப்ரல் 2017 (10:25 IST)
பிஎஸ்என்எல் செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோவுக்கு நேரடி போட்டியாக சில சலுகைகளை அறிவித்துள்ளது.

 
 
339 ரூபாய்க்கு 28 நாளைக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கட்டணமின்றி வழங்கும் புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. 
 
இதில், பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அனைத்து வெளி அழைப்புகளுக்கும் இலவசம், அதேபோல் வேறு நிறுவன எண்களுக்கு பேசும்போது தினமும் 25 நிமிடங்கள் இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் 3 அதிரடி சலுகைகளையும் பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 
 
# முதல் திட்டத்தில் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி டேட்டா.
 
# 2 வது திட்டத்தில் 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு  தினமும் 3 ஜிபி டேட்டா இலவசம்.
 
# 3 வது திட்டத்தில் 395 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம். 
 
இது தவிர பிஎஸ்என்எல் எண்களுக்கு 3000 நிமிடங்களும், தனியார் நிறுவன எண்களுக்கு 1800 நிமிடங்களும் இலவசமாக பேசலாம். இதன் வேலிடிட்டி 71 நாட்கள். இந்த அதிரடி சலுகைகள் அனைத்தும் வரும் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :