கடன் வேண்டுமா? CASH-e செயலி வந்தாச்சு!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 13 நவம்பர் 2016 (12:47 IST)
CASH-e செயலி வங்கி கணக்கு மற்றும் கிரேடிட் ஸ்கோர் பற்றி ஆராயாமல், சேஷியல் ப்ரோபைல்லை ஆய்வு செய்து கடன் அளிக்கிறது. 

 
 
எப்படிப் பணம் பெறுவது?
 
CASH-e செயலியை பதிவிறக்கம் செய்து, அதனை பேஸ்புக் மூலம் லாக்கின் செய்ய வேண்டும்.
 
CASH-e நிறுவனத்தின் மூலம் பணம் பெற விரும்பினால் முதலில் பேஸ்புக் கணக்கில் இருக்கும் நண்பர்கள் பட்டியல் (Friends list) மற்றும் அவர் பதிவிட்ட பதிவுகளை ஆய்வு செய்யப்படுகிறது. 
 
பின்னர் கடன் கொடுக்கலாமா? எவ்வளவு கொடுக்கலாம் என கணக்கிடப்படுகிறது.
 
CASH-e நிறுவனம்:
 
CASH-e நிறுவனத்தின் தலைவர் ரமண குமார், தனது ஹெல்த்கேர் பிபிஓ சிபே சிஸ்டம்ஸ் நிறுனத்தை ஜேபி மோர்கன் ஒன் ஈக்விட்டுப் பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்து விட்டு இந்நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். 
 
சமுக வளத்தளத்தில் பயன்பாட்டின் படி ஒருவரின் கிரேடிட் ரேடிங் மதிப்பிடப்படும் முறையை அறிமுகம் செய்து பின்னர் கடன் கொடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
கடனுக்கான வட்டி:
 
CASH-e நிறுவனம் துவங்கப்பட்டு 7 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்நிறுவனம் இளம் பட்டதாரிகளுக்கு மட்டும் குறுகியகாலக் கடன் வழங்குகிறது.
 
CASH-e நிறுவனத்தில் 15-90 நாட்கள் வரையிலான கடன் வழங்கப்படும். இதற்கு 30-36 சதவீதம் வரையிலான வட்டி விதிக்கப்படுகிறது.
 
அதிகச் சோஷியல் கிரேடிட் ரேடிங் கொண்டவர்களுக்கு 15 சதவீதம் என்ற வட்டி நிற்ணயிக்கப்படுகிறது. கடன் பெறும் வாய்ப்பும் இரட்டிப்பாகிறது.
 
வர்த்தகம் நிலை:
 
நிறுவனம் துவங்கி 7 மாதங்களே ஆன நிலையில் 10,000 வாடிக்கையாளர் தொடர்ந்து இந்நிறுவனத்தின் வாயிலாகக் கடன் பெற்று வருகின்றனர். 
 
தினமும் இந்நிறுவனம் 20 லட்சம் ரூபாய் அளவிலான கடன் அளித்து வருகிறது.
 
ஆவணங்கள்:
 
கடன் பெற, ஆர்பிஐ அறிவுறுத்தல்கள் படி பான்கார்டு, ஆதார் கார்டு, பே ஸ்லிப், வங்கி அறிக்கைகள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். 


இதில் மேலும் படிக்கவும் :