ரூ.251க்கு குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன்: நாளை முதல் முன்பதிவு

Ashok| Last Updated: புதன், 17 பிப்ரவரி 2016 (17:05 IST)
ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் விலையில் ரூ.251க்கு புதிய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய உள்ளது. இந்த செல்போனை வாங்குவதற்கான முன்பதிவு நாளை காலை 6 மணி முதல் தொடங்குகிறது.

 
 
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில் குறைந்த விலையில் ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் என்ற போனை தயாரித்துள்ளது. இந்த போனின் விலை 500 ரூபாய் என்று ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் தற்போதைய விலை ரூ.251 என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த செல்போனை டெல்லியில் இன்று மாலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் மூலம் உலகின் மலிவான ஸ்மார்ட்போனை ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் வழங்க உள்ளது.
 
மேலும், இந்த செல்போனை அந்நிறுவனத்தின் வலைதளத்தில் மட்டும் தான் முன்பதிவு செய்ய முடியும். வேற எந்த வர்த்தக இனையதளத்திலும் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை 6 மணி முதல் வரும் 21ம் தேதி இரவு 8 மணி வரை இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனின் தொழில்நுட்ப விபரம்:
 
1.3GHz Quad-core பிராஸசர், 
 
1 ஜிபி ரேம், 
 
8 ஜி.பி. (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ள முடியும்),
 
3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் கேமரா, லாலீபாப் 5.1 இயங்குதளம் மற்றும் ஒரு 1450mAh பேட்டரி கொண்டது.
 
நான்கு இன்ஞ் திரை அகலம்,
 
மேலும், இந்தியா முழுவதும் 650 இடங்களில் சர்வீஸ் சென்டர்களும் அமைக்கப்படவுள்ளன.
 
//freedom251.com என்ற இணையதளத்தில் இந்த போனை முன்பதிவு செய்யலாம். ஆனால், ஜீன் 30ஆம் தேதி முதல் தான் வடிக்கையாளருக்கு டெலிவரி செய்ய முடியும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது
 


இதில் மேலும் படிக்கவும் :