வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2015 (14:21 IST)

செல்போன் நிறுவன கொள்ளையில் இருந்து தப்பிக்க அற்புத வழி

செல்போன் நிறுவன கொள்ளையில் இருந்து தப்பிக்க இதோ அற்புத வழி கிடைத்துவிட்டது.


 

இன்றய உலகில் செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்றாகிவிட்டது. ஆனால், சிலர் போஸ்ட் பெய் அல்லது ப்ரீபெய்டு திட்டத்தில் இருப்பார்கள்.
 
ஆனால், செல்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சினை என்ற வென்றால், அது தேவை இல்லாத Service பெயரில் செல்போன் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. இந்த கொள்ளையில் சிக்கி மீளமுடியாமல் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். இதோ அந்த சிக்கலில் இருந்து விடுதலை பெற எளிதான வழி உள்ளது.
 
செல்போன் நிறுவனங்கள் வழங்கும் சேவை Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். இதில், Dialer Tune மற்றும் Caller Tune மற்றும் Wallpaper மற்றும் SMS Joke மற்றும் பல வரும். இது போன்ற பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
 
உங்கள் செல்போனில் இருந்து 155223 என்ற எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைப்புக்  கட்டணம் எதுவும் கிடையாது.
 
நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிடும். 24 மணி நேரத்திற்குப் பின்பு Call செய்தால் சர்வீஸ் மட்டும் Cancel செய்யப்படும். நீங்கள் Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்ய உரிமை வழங்கப்பட்டுள்ளது.