ஆப்பிள் வெற்றி: சாம்சங்க்கு ரூ.800 கோடி இழப்பீடு


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 9 அக்டோபர் 2016 (17:51 IST)
சாம்சங் நிறுவனத்திற்கு எதிரான காப்புரிமை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால் சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.800 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

 

 
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்து எதிராக வாஷிங்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆப்பிள் ஃபோன்களில் உள்ள காப்புரிமை பெற்ற சிலவற்றை சாம்சங் பயன்படுத்திக்கொண்டு அது பொதுவானவை என்று தெரிவித்தது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
 
சாம்சங் நிறுவனம் ஆப்பிள் காப்புரிமை சேவைகள் பொதுவானவை என்று நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்‌ கூறியுள்ளனர். 
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.800 கோடி இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் சாம்சங்கிற்கு ஏற்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :