ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி - மூன்று புதிய ஐ-போன்கள் அறிமுகம்


Sugapriya| Last Updated: செவ்வாய், 28 ஜூன் 2016 (13:17 IST)
ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-போன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் ஐ-போனை மேலும் மூன்று மாதிரிகளாக செப்டம்பரில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
 
ஐ-போன் 6, 6 ஸ்யை ஆகியவற்றைத் தொடர்ந்து ஐ-போன் 7, ஐ-போன் 7 ப்ள்ஸ், ஐ-போன் 7 ப்ரோ ஆகிய மாடல்கள் வர்த்தக சந்தைக்கு வெளிவர தயாராக உள்ளது. இதனுடைய
கூடுதல் அம்சங்களை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஆனாலும் இது டுயல் கேமரா [Dual Camera] மற்றும் வயர்லெஸ் சார்சர் [Wireless charger] , ( ஐ-பேட் ப்ரோ போன்று) 4.7, 5.5 அங்குலம் 
அகலங்கள் உள்ள திரை [Display] பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

இதன் விலை, மற்ற ஐ-போன்களைவிட 150 டாலர் கூடுதலாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :