புதிய ஆப்பிள் எஸ்.இ போன் அறிமுகம்


Murugan| Last Modified செவ்வாய், 22 மார்ச் 2016 (19:37 IST)
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான போனை அறிமுகம் செய்துள்ளது.

 

 
கலிபோர்னியாவைல் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் இந்த புதிய போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இந்த போன், ஐ போன் 6எஸ் போனை முன் மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐபோன் எஸ்.இ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த போன் மார்ச் 31ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஐ போனில் 64-பிட் ஆப்பிள் ஏ9 செயலி, 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்,1 ஜி.பி. ரேம், 12 மெகா பிக்சல் கேமரா, லைவ் போட்டோ, 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. சேமிப்பு போன்ற வசதிகள் உள்ளன.
 
மேலும், புளூடூத்(4.2), புதிய மைக்ரோ போன், பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் கூடிய ஆப்பிள் பே போன்ற முக்கிய அம்சங்கள் அமைந்துள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.49,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :