ரூ.100-க்கு 10GB டேட்டா: ஏர்டெல்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 25 பிப்ரவரி 2017 (11:03 IST)
ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை அதிகரிக்கும் விதமாக, 100 ரூபாய்க்கு 10GB 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 
 
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சில தினங்களுக்கு முன்பு ஜியோ பிரைம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ் உள்ளிட்ட சலுகைகள் பெரலாம்.
 
இதனால், ஏர்டெல் நிறுவனம் 3ஜி அல்லது 4 ஜி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.100 கட்டணத்தில் கூடுதலாக 10 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் கூடுதலாக ரூ.100 சேர்த்து ரீசார்ஜ் செய்வதன் மூலம் இச்சலுகையைப் பெறலாம் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :