1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Airtel’s Premium 300Mbps Broadband Plan: Enjoy Unlimited Data, 350+ TV Channels, and Top OTT Benefits!

ஏர்டெல் அதிரடி: 300Mbps வேகம், இலவச OTT மற்றும் டிவி சேனல்களுடன் புதிய பிராட்பேண்ட் பிளான்!

ஏர்டெல்
அதிவேக இணையம் மற்றும் தடையில்லா பொழுதுபோக்கை விரும்பும் பயனர்களுக்காக, ஏர்டெல் நிறுவனம் ஒரு பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதத்திற்கு ரூ.1,599 விலையில் கிடைக்கும் இந்த திட்டம், இன்றைய டிஜிட்டல் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்கிறது.
 
இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 300Mbps வரையிலான பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகம் வழங்கப்படுகிறது. வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர்/தேசிய அழைப்புகள் வசதியும் இதில் உண்டு. ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைத்து வேலை பார்ப்பவர்களுக்கும், 4K தரத்தில் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் இது மிகச்சிறந்த தேர்வாகும்.
 
இந்த திட்டத்தின் மிகப்பெரிய பலமே இதனுடன் கிடைக்கும் இலவச சந்தாக்கள் தான். Netflix, Amazon Prime Video, Apple TV+, JioHotstar, Zee5 மற்றும் Airtel Xstream Play போன்ற முன்னணி OTT தளங்களை நீங்கள் இலவசமாக அணுகலாம். இது தவிர, Google One மற்றும் Adobe Express வசதிகளும் வழங்கப்படுகின்றன.
 
மேலும், 350-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களை ஏர்டெல் எக்ஸ்டிரீம் பாக்ஸ் மூலம் கண்டு ரசிக்கலாம். தனித்தனியாக DTH மற்றும் OTT சந்தாக்கள் செலுத்துவதை விட, இந்த ஆல்-இன்-ஒன் திட்டம் பணத்தை மிச்சப்படுத்த உதவும்.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
வெளியாகிவிட்டது மோட்டோரோலா Edge 70 Pro ஸ்மார்ட்போன்.. 6500mAh பேட்டரி.. 144Hz AMOLED திரை.. இன்னும் பல..