சாதனை நாயகன் உமேஷ் சச்தேவ்

சாதனை நாயகன் உமேஷ் சச்தேவ்


K.N.Vadivel| Last Modified சனி, 11 ஜூன் 2016 (11:53 IST)
25 மொழிகள் மற்றும் 150 பேச்சு வழக்கு மொழிகளை கொண்டு, மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய வகையிலான செல்போன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார் உமேஷ் சச்தேவ்.
 
 
சென்னையை தலைமையிடமாக கொண்டு யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இணை நிறுவனராக உமேஷ் சச்தேவ் உள்ளார்.
இவர், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 25 மொழிகள் மற்றும் 150 பேச்சு வழக்குகளை புரிந்து கொண்டு, மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய வகையிலான செல்போன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
 
தனது நண்பர் ரவி சாரோகி என்பவருடன் இணைந்து இவர் உருவாக்கியுள்ள செல்போன் தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு மொழியில் பேசப்படும் தகவல், குறிப்பிட்ட 25 மொழிகளில் எந்த மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியை உள்ளடக்கியது.
 
இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக 2016-ம் ஆண்டிற்கான ”ஆயிரம் ஆண்டுகளில் உலகில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்” டைம்ஸ் நாளிதழ் பட்டியலில் உமேஷ் சச்தேவ் இடம் பெற்றுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :