2010இல் மீண்டும் பொருளாதார வளர்ச்சி: இன்போசிஸ் தலைவர்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
ஏற்றுமதியை பெருமளவிற்கு சார்ந்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறையை கடுமையாக பாதித்துள்ள உலகப் பொருளாதாரப் பின்னடைவு 2010ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ். கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான இன்போசிஸ் தலைவர், பொருளாதாரப் பின்னடைவில் இருந்து மீளும்வரை தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும் அளவி்ற்கு இருக்காது என்று கூறினார்.

2010ஆம் ஆண்டும் நடுப்பகுதியில் இருந்தே தகவல் தொழில்நுட்பத் துறை மீண்டும் தலைதூக்கத் துவங்கும் என்று தங்களுடைய மேற்கத்திய வாணிக கூட்டாளிகள் தெரிவித்ததாகக் கூறிய கோபாலகிருஷ்ணன், அதுவரை தங்களது நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்தைவிட குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.
உடனடி எதிர்காலம் இருளாகத் தெரிந்தாலும் புதிய வாய்ப்புகளை இன்போசிஸ் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :