14 ஆண்டு கால கனவு, தீர்மானம் மற்றும் அர்ப்பணிப்பு

Webdunia|
FILE
இன்று வெப்துனியா நிறுவனம் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. செப்டம்பர் 23, 1999 ஆம் ஆண்டுக்கு முன்பு ஒரு கற்பனையாக, ஒரு கனவாக இருந்த யோசனை, ஒரு திட்டம் இன்று உயிர் பெற்றிருக்கிறது. வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு கனவு வடிவம் பெற வேண்டி தீர்மானிக்கப்பட்டு, அர்ப்பணிபோடும், ஊக்கத்தோடும் செயலாக்கம் பெற தொடங்கியது. அப்போது அந்த எல்லை தொலைதூரத்தில் இருந்தது. குறுக்கே பல தடைகளும் இருந்தது. ஆனாலும் வெப்துனியா என்ற சாசனம் நகர்ந்து கொண்டே இருந்தது. இந்த நகர்வின் போது பலர் எங்களோடு இணைந்தனர். பலர் வெளியேறினர். அவ்வாறு பயணித்த பலரின் வியர்வையாலும், ஓயவில்லா உழைப்பாலும் இன்று வெப்துனியாவின் கொடி உயரே பறக்கின்றது.
எந்த ஒரு நிறுவனத்திற்கும், 14 ஆண்டுகள் என்பது பெரிய காலகட்டம் அல்ல. ஆனால் இந்த இணையதள உலகில், இந்த 14 ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வெப்துனியாவின் பங்களிப்பும், அது அடைந்திருக்கும் நிலையும் முக்கிய காரணமாகும்.

வெப்துனியா நிறுவனம் நைதுனியா வளாகத்தில் உள்ள பழைய குடோனில் பிறந்திருந்தாலும், இன்று இந்திய மொழிகளை ஓர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறது. முதன்முதலாக வெப்துனியா இணையதளத்தில் தனது பயணத்தை துவங்கியபோது மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இந்திய மொழிகளில் இருந்த எழுத்துருக்களை இணையதளத்திற்குள் கொண்டுவர பலவாறு சிந்தித்து, பல பரிசோதனை முயற்சிகளை பரிட்ச்சித்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று நாங்கள் பெருமை கொள்கிறோம்! அன்று மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும், இன்று வெற்றி பெற்றது மட்டுமல்ல, நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒரு காலகட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆங்கிலம் மட்டுமே இணையதளத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, இந்திய மொழிகள் இணையதளத்தில் இல்லை என்கிற காலகட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு வெப்துனியாவின் தனித்துவமான, அர்ப்பணிப்பு, தீர்மானமான பங்களிப்பு முக்கியமானது. இன்று ஒவ்வொருவரும் இணையதளத்தில் தங்களுக்கு தேவையானவற்றை இந்திய மொழிகளில் பருகி வருகின்றனர். இந்த தகவல் புரட்சி ஒரு சுற்றுக்கு வந்துள்ளது. இந்த இளஞ்செடி ஒரு மிகப்பெரிய மரமாக வளரும். பல மைல் தூரம் பயணிக்கும் இந்தப் பணியை செய்து முடிக்க இதோ நாங்களும்!
வெப்துனியாவின் இந்த 14 ஆண்டு கால பயணத்தில் பங்கெடுத்த அனைவரும் எங்களின் நன்றிகளுக்கும், வணக்கங்களுக்கும் உரியவர்கள்! நீங்கள் எப்போதும் உங்களுடைய உன்னதமான வாழ்த்துக்களுடனும், ஆழ்ந்த அக்கறையுடனும் எங்களுடன் இருப்பீர்கள் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

-ஜெய்தீப் கார்னிக்


இதில் மேலும் படிக்கவும் :