133 அரசு வெப்சைட்டுகள் பாதிப்பு

Webdunia|
கடந்த 3 மாதங்களில் மட்டும் 133 அரசு இணையதளங்கள் தாக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கணினி தொடர்பான குற்றங்களை கையாளும் இந்திய கணினி அவசர நடவடிக்கை குழு ( ICERT ) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2009ல் 92 அரசு இணையதளங்கள் தாக்கப்பட்டிருந்தது. இதேப்போன்று, 2010ல் 204ம், 2011ல் 248 அரசு இணையதளங்கள் தாக்கப்பட்டன.

தற்போது கடந்த 3 மாதங்களில் மட்டும் 133 அரசு இணையதளங்கள் தாக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான இணையமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கை படி, 2010 ஆம் ஆண்டு ரூ.1,234.94 லட்சம் பணம் இணையதளம் மூலம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதற்காக 2,232 இணைய குற்றங்கள் பதிவு ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ஆண்டு சிபிஐ பதிவு செய்துள்ள 2 சைபர் குற்றங்கள் மூலம் 17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு சைபர் குற்றங்களால் 4 பில்லியன் அமெரிக்க டாலர் இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்திருக்கிறார்.
எனவே, சைபர் குற்றங்கள், சைபர் பயங்கரவாதங்களை கட்டுப்படுத்த அரசு திட்டம் வகுத்து வருவதாகவும் அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்

News Summary:
As many as 133 government websites fell prey to hackers in the first three months of 2012, Minister of State for Communications and IT Sachin Pilot has said.


இதில் மேலும் படிக்கவும் :