‘கனெக்ட் இண்டியன்ஸ்’ திட்டத்திற்கு நல்ல வரவேற்பு: இன்டெல் இந்தியா

Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:42 IST)
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இணையத்தின் சேவையை கொண்டு சேர்ப்பதற்காக துவக்கப்பட்ட கனெக்ட் இண்டியன்ஸ் (Connected Indians) திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக, இன்டெல் இந்தியா நிறுவனத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் பயனாக அரசு, தொழில்துறை கூட்டமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய மக்களுக்கு தேவையான தகவல்கள், அதனைப் பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், முதலீடு, சேவை ஆகிய அனைத்து பிரிவுகளிலும் இத்திட்டம் முன்னேற்றம் கண்டுள்ளதாக சிவகுமார் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி 20 நிறுவனங்களின் உதவியுடன், 50 சிறு நகரங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவை அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தின் சக்தியை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் கடந்தாண்டு துவக்கப்பட்ட கனெக்ட் இண்டியன்ஸ் திட்டம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :