வெப்துனியாவிற்கு மைக்ரோ சாஃப்டின் தங்கச் சான்றிதழ்!

Webdunia| Last Modified செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (13:27 IST)
எமது இணையத்தின் முன்னோடி நிறுவனமான வெப்துனியாவின் மென்பொருள் உருவாக்கத் திறனை மெச்சியுள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், அதன் தங்கச் சான்றிதழ் பெற்ற கூட்டாளியாக்கி (Gold certified Partner) வெப்துனியாவை பெருமைபடுத்தியுள்ளது.

மைக்ரோ சாஃப்ட்டின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மென்பொருட் தீர்வுகளை உருவாக்குவதில் வெப்துனியா.காம் வெளிப்படுத்திய திறனிற்காக இந்த நிலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மேம்பட்டுவரும் சந்தையின் தேவைகளுக்கேற்ப ஒன்றிணைந்து செயலாற்றல், பயிற்சியளித்தல் ஆகியவற்றின் மூலம் மிக உயர்ந்த, ஒன்றிணைந்த மென்பொருள் உருவாக்கத் திறனை வெப்துனியா.காம் பெற்றுள்ளது என்பது இந்த சான்றிதழின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் அளித்த பெருமை மட்டுமின்றி, வெப்துனியா.காம் இணையத்தளத்தை தனது விழுப்பொன் (பிளாட்டினம்) கூட்டாளியாக பிபிசி ஹிந்தி இணையத்தளம் ஏற்றுள்ளது. இதன் மூலம் பிபிசியின் ஆன்லைன் பக்கத்திலிருந்து வெப்துனியா.காம் இணையத்தளத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :