விண்டோஸ் மொபைல்-6 : மைக்ரோசா·ப்ட் இந்தியா அறிமுகம்!

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (19:00 IST)
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும், பாதுகாப்பான புதியதொரு செல்பேசி மென்பொருளை மைக்ரோச·ப்ட் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது!

விண்டோஸ் மொபைல்-6 என்றழைக்கப்படும் இந்த மென்பொருள் தகவல் தொடர்புத் திறனை அதிகரிப்பதுடன், பயனீட்டாளரின் பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதென மைக்ரோச·ப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் ஹாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று இந்த புதிய மென்பொருளை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய ஹாகர். இது மிக சக்தி வாய்ந்த, எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், இந்தியாவிற்குள் மட்டுமின்றி உலக அளவில் துல்லியமான தொடர்பை பெற்றுத்தரவல்லது என்று கூறியுள்ளார். (யு.என்.ஐ.)


இதில் மேலும் படிக்கவும் :