விசா கட்டணம் அதிகரிப்பு: உலக வர்த்தக அமைப்பை நாட இந்தியா முடிவு

Webdunia| Last Modified செவ்வாய், 17 ஆகஸ்ட் 2010 (19:12 IST)
அமெரிக்காவிற்குப் பணியாற்றச் செல்லும் இந்திய தொழில் நெறிஞர்களின் ஹெச் 1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியிருப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று இந்திய வர்த்தக அமைச்சம் கருதுகிறது.

‘எல்லைப் பாதுகாப்பு நடவடிக்க’ என்ற பெயரில் அயல் நாட்டில் இருந்த அமெரிக்காவிற்கு வந்து பணியாற்றும் தொழில் நெறிஞர்களுக்கான விசா கட்டணத்தை அமெரிக்க அரசு பன்மடங்கு உயர்த்தியுள்ளது, உலக வர்த்தக அமைப்பின் விதிமுன்றைகளின்படி ஒரு சுயபாதுகாப்பு (Protectionist) நடவடிக்கையாகும். எனவே விசா கட்டண உயர்வை எதிர்த்து உ.வ.அ,வில் இந்தியாவால் முறையிட முடியும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலர் ராகுல் குல்லர், “அமெரிக்காவின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டு இந்தியா மெளனம் காக்க முடியாது. உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின்படி இது சரியான நடவடிக்கையல்ல. இப்பிரச்சனையை உ.வ.அ.வின் பரிசீலனைக்குக் கொண்டு செல்வோம்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் விசா கட்டண உயர்வால் அஙகு நிறுவனம் வைத்து நடத்தும் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு 200 மில்லியன் டாலர் கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :