ரிலையன்சுடன் இணைந்து இந்தியாவில் கூகுள் வணிகம்

Webdunia|
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆன்டிராய்ட் கருவிகளை இந்தியாவில் வர்த்தகம் செய்ய உள்ளது.

கூகுள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம், ஆன்டிராய்ட் மொபைல் இயங்குதளம் மற்றும் கூகுள் மொபைல் சேவைகளை விற்பனை செய்வதின் மூலம், ஆன்டிராய்ட் கருவிகளின் பயன்பாடுகளை ஊக்கவிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வர்த்தகம் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளது.
இதன் மூலம் ஆன்டிராய்ட் கருவிகளை பயன்படுத்துவோர் பிரத்தியேகமாக 3ஜி திட்டத்தின் கீழ் இணைய வசதியை 1 ஜிபி அளவு இலவசமாக பயன்படுத்தலாம்.

அதுமட்டுமல்லாது, வாடிக்கையாளர் சேவை, கட்டணம்வசூலித்தல், ஆன்டிராய்ட் பயன்பாடுகள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட ரிலையன்ஸ் வர்த்தக மையங்களை நாடு முழுவதும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
News Summary :
Reliance Communications said it has entered into an exclusive partnership with Google to market all devices built on Android platform for two years in India with its 3G connection and other facilities.


இதில் மேலும் படிக்கவும் :