மொபைல் பேங்கிங் வசதிக்கு வாடிக்கையாளர்களிடையே மவுசு அதிகரிப்பு

மும்பை| Webdunia| Last Modified திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (16:04 IST)
நாட்டின் முன்னணி வங்கிகளில் வழங்கப்படும் மொபைல் பேங்கிங் (mobile banking) வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 2 மாதங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் மொபைல் பேங்கிங் திட்டத்தில் புதிதாக 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை தங்கள் வங்கி இணைத்துள்ளதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த வசதியைக் கோரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றார்.
குறைந்த மதிப்பிலான பணப் பரிமாற்றத்திற்கு மொபைல் பேங்கிங் வசதி சிறப்பானது என்பதை வாடிக்கையாளர்களும், வங்கிக் கிளைகளும் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த மே மாதம் 10 ஆயிரமாக இருந்த SBI மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :