மொபைல் ஆப்ஸ்களை வழங்க உள்ளது ஃபேஸ்புக்

Webdunia|
புகழ்வாய்ந்த சமூக தளமான ஃபேஸ்புக், தற்போது, மொபைல், கணினி அப்ளிகேசன்களையும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான பக்கத்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

முதன் முறையாக பேஸ்புக்கின் ஆப் சென்டர் மூலம் மென்பொருளை அதன் தயாரிப்பாளரே நேரடியாக பயனர்களுக்கு விற்க ஃபேஸ்புக் ஏற்பாடு செய்கிறது.

இதன்மூலம் குறிப்பிட்ட பணம் பேஸ்புக் பெறும் எனக் கூறப்படுகிறது.
தற்போது, 200 அப்ளிக்கேசன்கள் பேஸ்புக்கில் உள்ளதாகவும், அதனை சுமார் 1 மில்லியன் பேர் பயன்படுத்துவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :