மே மாதத்தில் வெளி வருகிறது ’ஆகாஷ் கணினி’

Webdunia|
குறைந்த விலை கையடக்க கணினியான ஆகாஷ் திருத்தி அமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வரும் மே மாதம் முதல் சோதனை அடிப்படையில் வெளியாகும் என மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் மேலும் தெரிவிக்கும் போது, மாணவர்களிடம் இருந்த கருத்து மற்றும் ஆலோசனைகளின் படி, கையடக்க கணினி சோதிக்கப்பட்டு, மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

புதிய கணினியில் 3 மணி நேரம் நீடிக்கக்கூடிய மின்கலன், 700 மெகா ஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் ஏ8 செயலி, தொடுதிரை வசதி என சில அம்சங்களுடன் 1 லட்சம் கணினிகள் முதற்கட்டமாக மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கபில் சிபல் குறிப்பிட்டார்.
News Summary:
A faster and enhanced version of low-cost tablet PC, Aakash, would be launched on trial basis in May, Human Resources Development Minister Kapil Sibal


இதில் மேலும் படிக்கவும் :