மக்கள் மனம் கவர்ந்த புதிய HTC T328D Desire VC ஸ்மார்ட்போன்

Webdunia|
FILE
ஹெச்.டி.சி நிறுவனம் புதிய HTC T328D Desire VC என்ற ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்கியுள்ளது. இதன் ஆட்டோ ஃபோக்கஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளிட்ட அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும் வண்ணம் உள்ளது.

ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேக கோர்டெக்ஸ் A 5 ப்ராசஸர், ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 சிஸ்டம், ஏ-ஜி.பி.எஸ். சப்போர்ட் ஆகியவற்றை சில முக்கிய வசதிகளாகக் குறிப்பிடலாம்.

FILE
இதில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. என இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 119.5 X 62.3 X 9.5 மிமீ. எடை 119 கிராம். பார் வடிவில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. திரை 4 அங்குல அகலம் கொண்டது. மல்ட்டி டச் வசதி கிடைக்கிறது.
லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஸ்டோரேஜ் மெமரியாக 4 ஜிபி, ராம் மெமரி 512 எம்.பி. என இதன் வசதிகள் உள்ளன. 3ஜி போனாக, ஜி.பி.ஆர்.எஸ். வசதி கொண்டுள்ளது. வை-பி இணைப்பு கிடைக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :