மக்களை ஆட்டிப்படைக்கும் பேஸ்புக், ட்விட்டர் மோகம் !

Webdunia|
FILE
"உலகம் மிக சிறியது" என்பதை உறுதி செய்வதை போல இக்காலத்தில் உலக மக்களை இணையத்தில் இணைக்கும் சமூக வலைதளங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

அண்மைகாலங்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பின் இன்டெரெஸ்ட் போன்ற சமூக வலைதளங்கள் ஏற்கனவே தொழில்நுட்ப வளர்ச்சியால் சுருங்கியிருக்கும் உலகத்தை மேலும் சிறியதாக்கியிருக்கிறது எனக் கூறினால் அது மிகையாகாது.

இப்போதெல்லாம் 6 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை அனைவருக்கும் பேஸ்புக், ட்விட்டரில் அக்கௌன்ட்டுகள் இருக்கின்றன. உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்துகொள்ள உதவும் இத்தகைய சமூக வலைதளங்களின் மோகம் மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கின்றது என்பதற்கு இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 2012 ஆமஆண்டினபுள்ளி விவரங்களே சாட்சி:
பேஸ்புக்

இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபரானதை தெரிவித்த பாரக் ஒபாமாவின் பேஸ்புக் போஸ்டுக்கு 4 மில்லியன் லைக்குகள் குவிந்தன (The Huffington post)

பேஸ்புக்கில் இருக்கும் 25 சதவீத மக்கள் தங்களது தனிப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து கவலைப்படுவதே இல்லை (All Twitter)
பேஸ்புக் வலைதளத்தில் அக்கௌன்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 130 இணையதள நண்பர்கள் உள்ளனர் (All Twitter )

உலகளவில் 488 மில்லியன் மக்கள் தங்களது மொபைல் போனில் பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர் (All Facebook )

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது இணையதளங்களை பேஸ்புக் வலைத்தளத்தோடு ஒருங்கிணைத்துள்ளது (Ubarly)
ட்விட்டர்

ட்விட்டரில் அக்கௌன்ட் வைத்திருக்கும் மக்கள் சராசரியாக 307 ட்வீட்டுகளை பகிர்ந்துகொள்கிறார்கள் (Diego basch's blog)

ட்விட்டர் வலைதளத்தை பெருன்பான்மையாக பயன்படுத்தும் முதல் மூன்று நாடுகள் அமெரிக்கா (107 மில்லியன் மக்கள்), பிரேசில் (33 மில்லியன் மக்கள்), ஜப்பான் (30 மில்லியன் மக்கள்) - (Jeff Bullas
ட்விட்டரில் அதிகமாக ஃபாலோ செய்யப்படும் பிராண்ட் "யூ ட்யூப்" ஆகும். யூ ட்யூப்பிற்கு ட்விட்டரில் மட்டும் 19 மில்லியன்கள் ஃபாலோவர்களஉள்ளனர் (All Twitter )

34 சதவீத சந்தையாளர்கள் தங்களின் வர்த்தகத்தை ட்விட்டர் வலைதளத்தின் உதவியோடு முன்னேற்றியுள்ளனர் (Digital buzz blog)
2012 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் மக்கள் ட்விட்டரில் இணைந்துள்ளனர் (Infographics labs)


இதில் மேலும் படிக்கவும் :