பொள்ளாச்சியில் கூகுள்-தமிழ்.வெப்துனியா

webdunia photoWD

பொள்ளாச்சிக்கு அருகில் ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த கூகுள் இணையப் பேருந்திற்கு, அப்பகுதியில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், மாணவிகளும் வருகை தந்து இணையப் பயன்பாட்டை அறிந்து சென்றனர்.
கூகுள் பேருந்தில் இணைய பயன்பாட்டை அறிந்த மாணாக்கர்கள், பிறகு தமிழ்.வெப்துனியா.காமின் பந்தலிற்கு வந்து தமிழிலேயே செய்திகள் முதல் விளையாட்டு வரையிலான அனைத்துத் தகவல்களையும் பெறுவது பற்றி அறிந்து கொண்டது மட்டுமின்றி, வெப்துனியா இணைய வாசிகளுக்கு வழங்கியுள்ள தமிழில் மின்னஞ்சல், வாழ்த்துகள், வினாடி வினா ஆகியன குறித்து ஆர்வத்ததுடன் கேட்டறிந்தனர்.

உயர், மேனிலைப் பள்ளி மாணாக்கர்களில் பலரும் இணையத்தில் தங்களுக்கென்று ஒரு தனித்த தளத்தை உருவாக்க உதவிடும் மைவெப்துனியா.காம் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு தமிழ்.வெப்துனியா.காம் இணையத்தின் துணை ஆசிரியர்களான சித்தார்த்தனும், இராஜசேகரனும் விரிவாக விளக்கினர்.

மாணவர்களுடன், அவர்களின் ஆசிரியர்களும், ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களும் கூகுள் பேருந்திற்கும், தமிழ்.வெப்துனியா.காம் பந்தலிற்கும் வருகை புரிந்தனர்.

webdunia photoWD

மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்று இரண்டாயிரம் பேர் வந்து கண்டுகளிக்க நாச்சியார் வித்யாலயம் பள்ளி விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பள்ளியில் கணினி பாடத்திற்கென்று சிறப்பு வகுப்பறைகள் முழு வசதியுடன் உள்ளதால், மாணாக்கர்கள் மிக அதிகமான ஆர்வத்துடன் விவரங்களைக் கேட்டறிந்தனர்.

அ‌ய்யநாத‌ன்|
இணையத்தின் பயன்பாட்டை மாணவர்களிடமும், பொது மக்களிடமும் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த பயணித்துவரும் கூகுள் இணையப் பேருந்து இன்று பொள்ளாச்சி சென்றது.

பாரதிய வித்யா நிகேதன், சாந்தி மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, வசியாபுரம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, கோபாலபுரம் ஆடவர் மேனிலைப் பள்ளி, ராசி செட்டிப் பாளையம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, சாந்தினிகேதன் மழலையர் பள்ளி பொள்ளாச்சி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.இதில் மேலும் படிக்கவும் :