பேப்பர் வேணாம் ஆண்ட்ராய்ட் வேணும்: கல்லூரி மாணவிகள் சாதனை

FILE

சண்டிகருக்கு அருகே உள்ள ஆர்யன் பொறியல் கல்லூரியில் படிக்கும் நான்கு காஷ்மீரி மாணவிகளான ருமைசா, ஸீனத், சாதியா, யுஷ்ரா ஆகியோர் இணைந்து ஆர்யன்ஸ் ஆண்ட்ராய்டு சேவையை நிறுவியுள்ளார்கள். இந்த கல்வி நிறுவனத்தில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இந்த ஆண்ட்ராய்டு சேவையை 2.3 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு இணைந்த கருவிகளில் இதை டவுன்லோடு செய்யலாம்.

இந்த வசதி மூலம் கல்லூரி வெளியிடும் சுற்றறிக்கைகளை தங்கள் மொபைல் போன்கள் மூலமாகவே ஊழியர்களும், மாணவர்களும் பார்த்துக்கொள்ள முடியும். அதற்காக அவரவர்களுக்கு ஏற்ற அடையாளக் குறியீட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளி நபர்கள் இந்த சேவையை இறக்குமதி செய்து கல்லூரி வெளியிடும் பொதுவான அறிவிப்புகளையும், கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பார்வையிடலாம்.

இதை உருவாக்கும் பணியில் அந்த கல்லூரியில் திட்டங்கள் துறைத் தலைவரான மன்ப்ரீட் மன் உதவியாக இருந்துள்ளார். கல்லூரி தலைவரும் ஊக்கப்படுத்தினார். மேலும் இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் ஒதுக்க கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.


Webdunia| Last Modified சனி, 1 பிப்ரவரி 2014 (18:05 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் நான்கு காஷ்மீரி மாணவிகள் இணைந்து பேப்பர் இல்லாத வளாகமாக தங்கள் கல்லூரியை மாற்றுவதற்கு ஏற்ற ஆண்ட்ராய்டு சேவையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :