பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.டி.சி. டிசையர் 600 விற்பனைக்கு தயார்

Webdunia|
FILE
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.டி.சி. டிசையர் 600 ஸ்மார்ட்போ௦னை ஹெச்.டி.சி. நிறுவனம் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம்களும் எப்போதும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருந்தாலும், அடுத்த சிம் பயன்படுத்தி, இன்னொரு வரை அழைக்கலாம். எனவே, இரண்டு சிம்களையும் ஒரே நேரத்தில் இயக்க மற்ற மொபைல் போன்களில் இருப்பதைப் போல தனி செட்டிங்ஸ் அமைக்க வேண்டியதில்லை.

இதன் மற்ற சிறப்பு அம்சங்கள்:

1,860 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி, 2 பின் சார்ஜர், 8 ஜிபி அளவில் உள் நினைவகம், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 1 ஜிபி ராம் நினைவகம், 4.5 அங்குல அகலத்தில் எல்.சி.டி. திரை, உள்ளாக அமைந்த ஆம்ப்ளிபையர், இரு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்.
ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், பி.எஸ்.ஐ. சென்சார், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் மற்றும் 1.6 எம்பி திறனுடன் முன்பக்க கேமரா. இதன் விலை ரூ.26,990 எனக் குறிப்பிட்டாலும், சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :