புதிய விதிமுறைகள் த.தொ.நிறுவனங்களை பாதிக்கும்: நாஸ்காம்

Webdunia| Last Modified திங்கள், 23 மே 2011 (14:24 IST)
அயல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து தாங்கள் எடுக்கும் பணிகள் தொடர்பான விவரங்களை வணிக அயல் பணி (பிபீஓ) செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என்று நாஸ்காம் கூறியுள்ளது.

இந்திய தகவல் தொழில் நுட்பச் சட்டப் பிரிவு 43ஏ-யின் படி, தனிநபர்களின் தகவல்களை சேகரிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை அந்நிறுவனத்திடம் கடிதம் வாயிலாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது தொலைநகர் வாயிலாகவோ பெற வேண்டும் என்று கூறுகிறது.

இந்த புதிய விதிமுறை, பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட வரைவில் இல்லை என்று கூறியுள்ள தேச மென்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம், அரசு கூறும் உணர்வுப்பூர்வமான தகவல்களில் வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகள், காசோலை விவரங்களை ஆகியவற்றும் அடங்கும் என்றும், அப்படிபட்ட தகவல்கள் எந்த நோக்கத்திற்காக சேகரிக்கப்படுகிறது என்பதை அந்தந்த நபர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.
இந்தியாவின் அயல் பணி நிறுவனங்களுக்கு பணி ஒப்பந்தம் அளிக்கும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிட்டி பேங்க், ஹெச்.எஸ்.பி.சி., பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவற்றிடமிருந்த இந்த தகவல்களையெல்லாம் பெற்றதற்குப் பிறகே பணியைத் தொடங்க வேண்டும் என்று புதிய விதிமுறை வலியுறுத்துகிறது என்றும், இப்படிப்பட்ட விவரங்கள் தொடர்பாக ஒப்புதல் பெறுவது என்பது அயல் பணி நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாகும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், குறைத் தீர்ப்பாளர் ஒருவரை இணையத் தளங்கள் பணியமர்த்த வேண்டும் என்று இந்திய தரவு பாதுகாப்பு பேரவை எனும் அரசு அமைப்பு வற்புறுத்துகிறது. இதன் படி, இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் தனிப்படை எவரையும் பாதிப்பதாக இருந்தால் அதனை 36 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்றும், இப்படிப்பட்ட விடயங்களுக்கு குறைத் தீர்ப்பாளர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதையும் நாஸ்காம் எதிர்த்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :