புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 3 அறிமுகம்

Webdunia|
FILE
தென் கொரிய நிறுவனமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் 8 மற்றும் 10.1 இன்ச் அளவு கொண்ட புதிய என்ற டேப்லெட்களை வெளியிடுவது குறித்து அறிவித்துள்ளது.

டேப்லெட் குறித்த விலை அறிவிப்பை சாம்சங் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஜூன் மாதம் முதல் உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த டேப்லெட் இருக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

இரண்டு டேப்லெட்களுமே ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தில் 3ஜி, எல்.டி.இ மூலம் வெறும் வைஃபையால் மட்டுமே இயங்கக் கூடியது.
FILE
சாம்சங் கேலக்ஸி டேப் 3 - 8 இன்ச் டேப்லெட்டில் 1.5GHz டியூவல் கோர் ப்ராசஸர், 1280X800 பிக்சல் கொண்ட WXGA TFT திரையுடன் உள்ளது. இந்த டேப் 1.5GB ராம்-ஐ சப்போட் செய்யும் திறன் கொண்டது. பின்புறம் 5 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, முன்புறம் 1.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் 3 - 10.1 இன்ச் டேப்லெட்டில் 1.6GHz டியூவல் கோர் ப்ராசஸர், 1280X800 பிக்சல் கொண்ட WXGA TFT திரையுடன் உள்ளது. இந்த டேப் 1GB ராம்-ஐ சப்போட் செய்யும் திறன் கொண்டது. முன்புறம் 3 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, முன்புறம் 1.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :