புதிய சாம்சங் கேலக்ஸி கோர் ஐ 8262 அறிமுகம்

Webdunia|
FILE
பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தி மொபைல் தரவரிசையில் முதல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டு வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் இரண்டு சிம் இயக்கம், நான்கு பேண்ட் செயல்பாடு, 3ஜி பயன்பாடு ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 129.3 x 67.6 x 9 மிமீ. எடை 124 கிராம். பார் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4.3 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாடு கிடைக்கிறது.

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளன. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் வசதியுடன், 5 எம்.பி. திறனுடன் கேமரா உள்ளது. இதில் ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம், ஸ்மைல் தெரிந்து இயங்கும் தன்மை ஆகிய வசதிகள் சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பிற்கென முன்புறம் ஒரு வி.ஜி.ஏ. கேமரா உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :